Enable Javscript for better performance
சாலை விபத்து: உணவு விடுதி ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விடுதி ஊழியர் உயிரிழந்தார்.

    சிதம்பரம் காசிம்கான் பேட்டை தெருவைச் சேர்ந்த மனோகரன் (55). இவர், சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் பணியாற்றி வந்தார்.  செவ்வாய்க்கிழமை இரவு மனோகரன் மூன்று சக்கர சைக்கிளில் விறகு ஏற்றிக் கொண்டு அண்ணாக்குளம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இருந்து வந்த கார் மோதியதில் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai