சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக அதிமுக, திமுக, பாமக, தேமுதிக கட்சியினர் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறி அனுமதியின்றி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம், வளையமாதேவி சாலை, நெய்வேலி, சேப்ளாநத்தம் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சுவர் விளம்பரம் எழுதியதாக, கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன் (கெங்கைகொண்டான்), ராஜசேகர் (சேப்ளாநத்தம்) ஆகியோர் அளித்த புகாரின் பேரில், கெங்கைகொண்டான் அதிமுக நகரச் செயலர் மனோகர், திமுக நகரச் செயலர் சதாசிவம், கம்மாபுரம் பாமக ஒன்றியச் செயலர் வடிவேல், தேமுதிக ஒன்றியச் செயலர் ராஜவன்னியன் ஆகியோர் மீது மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai