சுடச்சுட

    

    நாளை சரநாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

    By நெய்வேலி  |   Published on : 17th March 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) நடைபெற உள்ளது.

     பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகையில் புகழ் பெற்ற ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயிலின் கிழக்குப் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில், 5 நிலை கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா 18-ஆம் தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai