பூவராக சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை
By சிதம்பரம் | Published on : 17th March 2016 05:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது.
பெருமாள் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் பூவராக பெருமாள் வீற்றுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 14-ம் தேதி மூலவர் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ம் தேதி விநாயகர் பூஜை நடைபெற்றது. 16-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. இதனை முன்னிட்டு 5 யானைகளில் வைத்து கலச ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 5 கால யாகசாலை பூஜை நடைபெற்ற பின்னர், வருகிற மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் பூமாலை சண்முகம், செயல்அலுவலர் பா.சீனுவாசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.