Enable Javscript for better performance
மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆணவக் கொலையை கண்டித்து, சிதம்பரத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பால.அறவாழி தலைமை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் ஏ.என்.குணசேகரன், மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, நிர்வாகிகள் ஜவகர், கார்கிவளவன், குறிஞ்சிவளவன், பாவாணன், செல்வமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் வி.எம்.சேகர், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவக் கொலைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai