சுடச்சுட

    

    நெய்வேலியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருடப்பட்டது.

    நெய்வேலி அடுத்துள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (52).  இவர் நெய்வேலி, வட்டம் 16-ல் உள்ள அமராவதி வணிக வளாகத்தில்  மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

    திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச் சென்றார். செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்கச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று கல்லா பெட்டியை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல் அறிந்த நெய்வேலி நகரிய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கடை உரிமையாளர் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai