சுடச்சுட

  

  மாநில சதுரங்கப் போட்டிக்கு சிறுவர்கள் தேர்வு

  By நெய்வேலி  |   Published on : 17th March 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில அளவிலான செஸ் போட்டிக்கு கடலூர் மாவட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் தேர்வு போட்டி, பண்ருட்டி மேலப்பாளையம் ஜான்டூயி தொடக்கப் பள்ளி வளாகத்தில் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

   கடலூர் மாவட்ட செஸ் கழகமும், பண்ருட்டி கிங்ஸ் செஸ் அகாதெமியும் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது.

   9 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள்,

  11 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள்,

  13 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள்,

  15 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள் மற்றும் 25 வயதுக்கு உள்பட்டவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

   மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு சிறுவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 25 வயதுக்கு உள்பட்டவர்களில் 4 பேர் அனுமதிக்கப்படுவர். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, கிங்ஸ் செஸ் அகாதெமி பயிற்சியாளரை என்ற 9095862842 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கிங்ஸ் செஸ் அகாதெமியின் தலைவர் ஆர்.பாண்டியன் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai