Enable Javscript for better performance
விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடன் பெற்றுள்ள விவசாயிகளை மிரட்டும் வங்கி மேலாளர்களைக் கண்டித்து காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.

    செயலாளர் பாரதி, மாவட்டத் தலைவர் லெட்சுமிகாந்தன், கருப்பூர் கலியமூர்த்தி, துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காட்டுமன்னார்கோவிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் நகைக் கடன் பெற்றுள்ள விவசாயிகள் அதை மீட்க பணத்தை வங்கியில் கட்டும்போது விவசாயக் கடன்களை தீர்த்தால் மட்டுமே நகையை தருவதாகக் கூறி மிரட்டுவதையும், மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கி அந்தப் பணத்தை கல்விக் கடனில் வரவு வைத்து வருகின்றனர்.

    இவ்வாறு செயல்படும் இரு வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தஞ்சை மாவட்டம், சோழன்குடிகாடு விவசாயி தனியார் வங்கி ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்தும், அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் கிராமத்தில் விவசாயி தற்கொலைக்குக் காரணமான தனியார் வங்கி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மேலும் தமிழகம் முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் விவசாயிகள் மீது மேற்கொள்ளும் ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

    வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மதிவாணன், முருகேசன், திருவரசமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai