சுடச்சுட

  

  100% வாக்குப் பதிவுக்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

  By நெய்வேலி  |   Published on : 17th March 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்கள் தங்களது கிராமத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

   கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு கல்லூரி மாணவ, மாணவிகளை மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது.

   மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாணவ, மாணவிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்கான தூதர் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் பேசியது:

  கல்லூரிகளில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலில் வாக்காளராக பதிவு செய்ய வேண்டும். பின்னர், துறை மற்றும் வகுப்பு வாரியாக பட்டியல் தயார் செய்து எபிக் எண் வாங்க வேண்டும்.  மாணவர்கள் தங்கள் கிராமத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவுக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். வற்புறுத்தலுக்கு இணங்காமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்.

   மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத்  தொகுதிகளிலும் ஒரு மகளிர் வாக்குச்சாவடியும், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்வு தளம், தள்ளு வண்டி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளன.

   1800-425-7019 என்ற கட்டணமில்லா தொலைபேசியை அழைத்தும், 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

   இதுவரை, மாவட்டத்தில் 52 தேர்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 4.86 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   208 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 42 வெடிமருந்து கிடங்குகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக 22 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய பதில் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சர்மிளா, வட்டாட்சியர் காந்தி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai