சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை, ஆசிரியர் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில், ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது எப்படி என்ற தலைப்பில் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

  உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) க.ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இயக்குநர் ஆர்.எம்.கதிரேசன் பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசினார்.

   அறிவியல் புல முதல்வர் எம்.சபேசன், இயக்குநர் தி.அரங்கசாமி (ஆராய்ச்சி பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம்) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  எல்.முல்லைநாதன் வரவேற்றார்.

   இதில், ஆசிரியர்களுக்கான சிறப்பு வகுப்புகளை முனைவர் ஆர்.எம்.கதிரேசன், முன்னாள் பதிவாளர் ந.பஞ்சநதம், முனைவர்கள் சக்திவேல், வி.வெங்கடேசலு ஆகியோர் நடத்தினர். பயிலரங்கில் மருத்துவப் புலம், வேளாண்புலம், அறிவியல் புலம், கலைப்புலம் மற்றும் பொறியியல் புலத்தைச் சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

  கல்விக்குழு இயக்குநர் கே.மணிவண்ணன் நிறைவுரையாற்றி சான்றிதழ்களை வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai