Enable Javscript for better performance
ஓய்வூதியர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் வட்ட ஒய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் பொன்.மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெங்குசாமி முன்னிலை வகித்தார். செயலர் சின்னசாமி வரவேற்றார். பொருளர் கோ.ராமமூர்த்தி நிதிநிலை அறிக்கையை படித்தார். நிர்வாகிகள் தங்க.சிவராமன், த.பரமசிவம், டி.சந்தானம், ஒ.ஆர்.கலியமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

    ஓய்வூதியர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்துக்கு நல நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்குவது, சிதம்பரம் வட்ட சங்கம்-தமிழ்நாடு மாநில சங்கத்துடனான இணைப்பை மேலும் ஓராண்டுக்கு புதுப்பிப்பது என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai