சுடச்சுட

    

    கணவர் மீது சுடுநீர் ஊற்றியதாக மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் செ.ஜெயபால் (50). இவரது மனைவி கபாலி (50). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மீனவரான ஜெயபால் சரியாக வேலைக்குச் செல்லாமல், மதுப் பழக்கத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. மேலும், மனைவி கபாலியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம்.

     இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த கபாலியிடம் மது அருந்தப் பணம் கேட்டு தொந்தரவு செய்து, அவரைத் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கபாலி சுடுநீரை ஜெயபால் மீது ஊற்றிவிட்டாராம்.

     இதில் முகம், கைகளில் காயமுற்ற ஜெயபால், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்தப் புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai