சுடச்சுட

    

    கரும்பு ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக  விவசாயி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    பெண்ணாடம் அருகே உள்ள இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ரா.பாலமுருகன் (35) என்பவர் மருவத்தூர் பகுதியின் கரும்பு ஆய்வாளராக செயல்பட்டு வருகிறார்.

    இவரை அதேப் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் நாராயணசாமி (35) புதன்கிழமை சந்தித்துள்ளார். அப்போது தனது வயலில் கரும்புகளை வெட்டுவதற்கு ஏன் இயந்திரம் அனுப்பவில்லை எனக் கேட்டாராம். இதுதொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பாலமுருகனை, நாராயணசாமி தாக்கியதாகத் தெரிகிறது. 

    இதுகுறித்து பாலமுருகன் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நாராயணசாமியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai