சுடச்சுட

  

  கூர்நோக்கு இல்லத்திலிருந்து 2 சிறார்கள் தப்பியோட்டம்

  By கடலூர்  |   Published on : 18th March 2016 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பியோடிய 2 சிறார்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  கடலூர் அருகே உள்ள கோண்டூரில் சமூக நலத் துறையின் கீழ் அரசு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் ஆள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், திருட்டு வழக்கில் பிடிபட்ட தேவதானம்பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் அடைக்கப்பட்டிருந்தனர்.

  வியாழக்கிழமை காலை கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் வழக்கமான கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவர்கள் இருவரும் காணாமல் போயிருப்பது தெரிய வந்ததாம். மேலும், சமையலறையில் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே, இருவரும் ஜன்னல் வழியாக தப்பியோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  இதுகுறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai