சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட கைப்பந்து (ஹேண்ட்பால்) சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  கடலூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக சி.கே.கல்விக்குழும இயக்குநர் டி.சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்க பாதுகாவலர்களாக துரை.பிரேம்குமார், என்.கோபாலகிருஷ்ணன், டி.வெங்கடேசன், என்.ராமச்சந்திரன் ஆகியோரும், பொருளராக சி.பி.செல்வராஜ், தொழில்நுட்ப ஆலோசகராக இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்றுநர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணைத் தலைவர்கள்,  இணைச் செயலர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

  கூட்டத்தில், மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டியை கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் மாதம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் செயலர் ஜி.அசோகன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai