சுடச்சுட

  

  மாவட்டக் காவல்துறை சார்பில் சமூக நீதி விழிப்புணர்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கடலூர் மாவட்ட காவல்துறையின் ஒரு பிரிவாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு சார்பில், நெல்லிக்குப்பத்தில் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மனித உரிமைகள் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.கணேசன் தலைமை வகித்தார்.

  முகாமில், பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி மனித நேயத்துடனும், சகிப்புத் தன்மையுடனும், சமுதாய ஒற்றுமையுடனும் வாழ வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

   தொடர்ந்து திருக்கண்டேஸ்வரம், பனங்காட்டு காலனி ஆகிய பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. காவல் ஆய்வாளர் பி.வி.முரளி மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai