சுடச்சுட

    

    நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தினர் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். வாகனங்களில் கட்டியிருந்த தொழிற்சங்கக் கொடிகளை அகற்றினர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்படும் பணம், பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

     இந்த நிலையில், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.தினேஷ் தலைமையிலானக் குழுவினர் நெய்வேலியில் உள்ள காமராஜர் சதுக்கம், எட்டு ரோடு சந்திப்பு, பெரியார் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

     மேலும், நெய்வேலி நகரியம் பகுதியில் தொழிற்சங்கத்தினர் தங்களது இருசக்கர வாகனங்களில் கட்டியிருந்த தொழிற்சங்கக் கொடிகளை தக்க விதிமுறைகளை கூறி குழுவினர் அகற்றினர். தணிக்கையின் போது கிராம நிர்வாக அலுவலர் மதுரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai