சுடச்சுட

    

    வெவ்வேறு சம்பவங்களில், பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

    பண்ருட்டி காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் ஆர்.ஏழுமலை. இவர் வியாழக்கிழமையன்று பண்ருட்டி ரயில் நிலையம் பகுதியில் காவலர் அழுகுபாலனுடன் துரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சேட்டு என்ற தியாகராஜன் (31) என்பவர் காவலர்கள் இருவரையும் மிரட்டி, உங்களிடம் இருக்கும் பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவதாகக் கூறினாராம்.

    இதுகுறித்து ஏழுமலை கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி போலீஸார் சேட்டுவை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தாழம்பட்டு காலனியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ராசு என்ற ராஜி (27) சென்றுகொண்டிருந்தாராம். அவரை காவலர்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் கபிலன் என்ற கவிசங்கர் (26) வழிமறித்து, மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி தாக்க முயன்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பண்ருட்டி போலீஸார் கபிலனைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai