Enable Javscript for better performance
பல்கலை. படிப்பு மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பல்கலை. படிப்பு மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

    By கடலூர்  |   Published on : 18th March 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்ணாமலைப் பல்கலைக்கழக கடலூர் படிப்பு மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கடலூர் படிப்பு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி இயக்க கடலூர் படிப்பு மையத்தில் பட்டய மேற்படிப்புகளுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

     மேலும், தொலைத்தூரக் கல்வியில் முதுகலை, இளங்கலை பாடப்பிரிவுகளில் சேரும் மாணவ, மாணவியருக்கும், குறிப்பிட்ட டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ பாடப் பிரிவுகளில் சேருவோருக்கும் 50 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

     எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கடலூர் புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் படிப்பு மையத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், படிப்பு மையத்திலேயே பாடப் புத்தகமும் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 04142-293077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai