சுடச்சுட

  

  பேருந்து மோதி சிறுவன் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

  By கடலூர்  |   Published on : 18th March 2016 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உறவினர்கள் கடலூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  கடலூர் முதுநகர் சாலை நகரைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகன்கள் பிரபு (26), பாலாஜி (16). இருவரும் அதே பகுதியில் குடிநீர் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். புதன்கிழமை பாலாஜி தண்ணீர் கேன் ஏற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை சிதம்பரம்-கடலூர் சாலையில் தள்ளிக்கொண்டுச் சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் பலத்த காயமுற்ற பாலாஜி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

   இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம்.

  ஆனால், அரசுப் பேருந்து மோதியதால்தான் பாலாஜி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். எனவே, அடையாளம் தெரியாத வாகனம் என்பதை மாற்றி, அரசுப் பேருந்து என வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சாலைக்கரை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   இதனையடுத்து அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அடையாளம் தெரியாத வாகனம் என்பதை, அரசுப் பேருந்து என மாற்றி வழக்குப் பதிந்ததைத் தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் மறியலைக் கைவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai