சுடச்சுட

    

    மாநில கூடைப்பந்து போட்டி: சிதம்பரம் மாணவிகள் வெற்றி

    By சிதம்பரம்  |   Published on : 18th March 2016 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுனியர் கூடைப்பந்து போட்டியில் சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்றுள்ளது.

    ரிலையன்ஸ் குரூப் மற்றும் ஜுனியர் இந்தியா அமைப்பு இணைந்து சென்னையில் அண்மையில் நடத்திய ஜூனியர் மூவர் கூடைப்பந்து போட்டியில், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி பங்கேற்றது.

    இப்போட்டியில் சென்னை வேலம்மாள் தேசியப் பள்ளி அணியை, சிதம்பரம் அணி தோற்கடித்து முதலிடம் பிடித்தது. இந்த  அணிக்கு அமெரிக்க பயிற்சியாளர் கார்லோஸ் பரோகா பரிசு வழங்கினார். சாதனை படைத்த மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.ராஜன் பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai