சுடச்சுட

  

  வாக்களிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது: மாவட்டத் தேர்தல் அலுவலர்

  By கடலூர்  |   Published on : 18th March 2016 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்களிக்கும் உரிமையை யாரும் விட்டுக் கொடுக்கக் கூடாது என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் தொழிலாளர்களிடம் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

  சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர், ஆசிரியர்கள் மத்தியில் ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தொழிற்சாலை ஊழியர்களிடம் வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி வியாழக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைக்குச் சென்று, அங்குள்ள 850 ஊழியர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவர்கள், ஆசியர்களிடம் விழிப்புணர்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

   வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை அறிய 1950 என்ற எண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) செய்து அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவரும் வாக்களிக்கும் உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றார் ஆட்சியர்  நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் ஆர்.அன்பழகன், வருவாய் ஆய்வாளர் ப.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai