விஏஓவுக்கு மிரட்டல்: ஒருவர் கைது
By கடலூர் | Published on : 18th March 2016 06:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருபவர் தொ.ரகு (39). டி.புதுப்பாளையம் பகுதியில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் புதன்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அங்கிருந்த வேம்பு, தென்னை மரங்களை அதே பகுதியைச் சேர்ந்த ச.பத்மநாபன் (44) என்பவர் வெட்டியது தெரிய வந்ததாம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ரகு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் சந்துரு வழக்குப் பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தார்.