சுடச்சுட

  

  வெலிங்டன் நீர்த்தேக்க சீரமைப்புப் பணியை கண்காணிக்க குழு: விவசாயிகள் வலியுறுத்தல்

  By கடலூர்  |   Published on : 18th March 2016 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெலிங்டன் நீர்த்தேக்க சீரமைப்புப் பணியை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிக் குழு அமைக்க வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  திட்டக்குடியில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் தயா.பேரின்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ்குமார், வீரமுத்து, சந்திரபாபு, பரமசிவம், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

   வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகளின் உரிமைகளை நிலை நாட்ட சங்கம் சார்பில் சட்டப் பேரவைத் தேர்தலில் விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிடுவது. நீர்த் தேக்கத்தில் மீன் பிடிப்பதையும், மீன்பிடி ஒப்பந்தத்தையும் தடை செய்து தண்ணீர் முழுவதையும் பாசனத்துக்கு திறந்துவிட வலியுறுத்துவது.

   பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால் பாசனத்துக்கு நீர் முழுமையாகச் சென்றடையாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீர்த் தேக்கத்தினை சீரமைக்க அரசு ஒதுக்கியுள்ள நிதி ரூ.6.40 கோடி முறையாக செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.

  நீர்த்தேக்கத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். வாய்க்கால் சீரமைப்புப் பணிக்கு கடந்த 5 ஆண்டுகளில் அரசு செலவிட்டுள்ள தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகி அன்பழகன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai