சுடச்சுட

  

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  கட்சியின் மாநில  அமைப்புச் செயலராக தி.ச.திருமார்பன், செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், கலை இலக்கிய பேரவை துணைச்செயலர் ரா.புரட்சிவேந்தன், கல்வி பொருளாதார இயக்க துணைச் செயலர் முருகன், மகளிரணி துணைச் செயலர் க.சரஸ்வதி, கிறிஸ்தவ சமூகநீதி பேரவை துணைச் செயலர் அ.பேரறிவாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் தலைமையில் கடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மண்டலச் செயலர் சு.திருமாறன், மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai