சுடச்சுட

  

  தமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு மாத அறிக்கையும், பொருளர் டி.ராதாகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையும், செயற்குழு உறுப்பினர் வி.சித்தானந்தம் ஓய்வூதியர்கள் இதழுக்கான வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர். நிர்வாகி ஆர்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

  நிர்வாகிகள் த.சண்முகசுந்தரம், ஏ.கலியபெருமாள், எஸ்.ஏ.தாஸ், தனராசு, ஆர்.திருநாராயணன், பேட்ரிக், எம்.தண்டபாணி, வை.முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சங்கத்தின் துணைத் தலைவர் எம்.முத்துசாமி வரவேற்க, உதவிச் செயலர் பி.குணசேகரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai