Enable Javscript for better performance
குடும்ப வளர்ச்சியில் பெண்கள் பங்களிப்பு அதிகம்: மாவட்ட முதன்மை நீதிபதி- Dinamani

சுடச்சுட

    

    குடும்ப வளர்ச்சியில் பெண்கள் பங்களிப்பு அதிகம்: மாவட்ட முதன்மை நீதிபதி

    By கடலூர்  |   Published on : 19th March 2016 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடும்ப வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம் என்றார் கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பி.தனபால்.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி.தனபால் தலைமை வகித்து பேசியதாவது: குடும்ப வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் பெண்கள் மீது ஆண்கள் நம்பிக்கை வைத்து, சம்பாத்தியத்துக்காக வெளியே செல்வதுதான். பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம். பெண்கள் தமிழுடன் ஆங்கிலத்தையும் படிக்க வேண்டும் என்றார் அவர்.

    கருத்தரங்கில், மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.செல்வம், கூடுதல் நீதிபதி கே.அறிவொளி, முதன்மை சார்பு நீதிபதி எம்.தாண்டவன், கல்லூரி முதல்வர் கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் சார்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி, உரிமையியல் நீதிபதி எம்.சாமுண்டீஸ்வரிபிரபா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சார்பு நீதிபதிகள் டி.ஜெயகுமாரி ஜெனிரத்னா, கணேசன், நீதிபதிகள் நசீர்அலி, ரமேஷ் ஆகியோர் பேசினர்.

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகள் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். ஆணைக்குழுவின் நிர்வாக உதவியாளர் டி.கார்த்திகேயன், வழக்குரைஞர்கள் கே.குணவதி, ஆர்.சுஜாதா, சட்ட இணைத் தொண்டர்கள் ஆர்.சண்முகம், ஆர்.புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் என்.செல்வி வரவேற்க, ஆணைக்குழு நிர்வாக உதவியாளர் ஆர்.ரங்கநாதன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai