சுடச்சுட

  

  சிதம்பரம் ரயில் நிலையத்தில் மண்டல மேலாளர் ஆய்வு

  By சிதம்பரம்  |   Published on : 19th March 2016 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே சென்னை மண்டல மேலாளர் வஷிஷ்ட ஜோகிரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  அவருடன் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால், வணிக மேலாளர் பத்மதாசன், உதவி ஆணையர் ஏ.கே.தாஸ் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

  ஆய்வின்போது, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் புவனேஸ்வர் செல்லும் ரயில் சிதம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில் நிலையத்தில் கட்டடங்கள் பழுதடைந்துள்ளன; கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளன; குடிநீர் வசதி இல்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

   அதற்கு வஷிஷ்ட ஜோகிரி பதில் அளித்துப் பேசுகையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் புவனேஸ்வர் ரயில் நின்று செல்வது குறித்து ரயில்வே போர்டு முடிவு செய்ய வேண்டும். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார். அதன் பின்னர் அதிகாரிகள் திருச்சி புறப்பட்டு சென்றனர்.  முன்னதாக வஷிஷ்ட ஜோகிரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிச்சாவரம் சென்று படகுசவாரி செய்தனர். பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai