சுடச்சுட

    

    தத்துகொடுக்கும் நிறுவனத்திடம் தொட்டில் குழந்தை ஒப்படைப்பு

    By கடலூர்  |   Published on : 19th March 2016 06:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை தனியார் தத்துகொடுக்கும் நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் சுமார் 2 மாத பெண் குழந்தை அண்மையில் கிடந்தது. அக்குழந்தை மீட்கப்பட்டு கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் அரசு தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    குழந்தை மிகவும் பலகீனமாக இருந்ததால் பச்சிளம் குழந்தை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அக்குழந்தை நல்ல நிலையில் இருப்பதைத் தொடர்ந்து அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் உள்நாட்டு தத்துகொடுக்கும் நிறுவனமான சென்னையிலுள்ள கிரிஸ்ட் பெய்த்து ஹோம் என்ற நிறுவனத்திற்கு குழந்தையை நல்ல நிலையில் ஒப்படைத்தார். மேலும், குழந்தைக்கு பூங்குழலி என ஆட்சியர் பெயரிட்டார்.

    மாவட்ட சமூகநல அலுவலர் ச.மீனா, மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai