நகராட்சி மேலாளருக்கு மிரட்டல்: ஒருவர் கைது
By கடலூர் | Published on : 19th March 2016 06:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் நகராட்சி மேலாளரை மிரட்டியது தொடர்பாக போலீஸார் வெள்ளிக்கிழமை ஒருவரைக் கைது செய்தனர்.
கடலூர் நகராட்சியின் மேலாளராக செயல்பட்டு வருபவர் சி.ராமஜெயம் (53). இவர் வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நா.ரவீன் (44) என்பவர் அலுவலகத்துக்கு வந்து மேலாளரை சந்தித்தாராம். நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்துவந்த தனது தாயார் இறந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும், தனக்கு கருணை அடிப்படையில் அந்த வேலையை வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதற்கு மேலாளர் பதிலளித்தும், மதுபோதையிலிருந்ததாகக் கூறப்படும் ரவீன் தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாராம். மேலும், மேலாளருக்கு மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மேலாளர் ராமஜெயம் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ரவீனை கைது செய்தனர்.