சுடச்சுட

  

  பணம் பறிமுதல் குறித்து விசாரிக்க மேல்முறையீட்டுக் குழு அமைப்பு: தேர்தல் நடத்தும் அலுவலர்

  By கடலூர்  |   Published on : 19th March 2016 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாகனத் தணிக்கையின்போது அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து விசாரிக்க மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் என்.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

  கடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கோட்டாட்சியரும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.

  இதில், தலா 3 பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கோட்டாட்சியர் கூறியதாவது:

  பொதுமக்கள் தங்களது முக்கிய பணிகளுக்காகவும், வியாபாரிகள் தொழிலுக்காகவும் எடுத்துச் செல்லும் ரூ.50 ஆயிரம் வரையிலான பணத்தை பறிமுதல் செய்வதால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களை பாதிக்காத வகையில் வாகனத் தணிக்கை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   பணம் எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. யாருக்கானது என்பது குறித்து விசாரித்து, அது அரசியல் சார்பற்றதாக இருக்கும் பட்சத்தில் திரும்ப வழங்கப்படும். அரசியல் சார்புக்காக பணம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படுவதோடு, வழக்குப்பதிவு செய்யப்படும்.

   ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பறிமுதல் செய்யப்படும் பணம் குறித்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விசாரணை நடத்துவார்கள். உரிய ஆவணம் காண்பிக்கப்படும் போது 3 நாள்களில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும். அதற்கு மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்படும்போது அதுகுறித்து விசாரித்து முடிவெடுக்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், மகளிர் திட்ட அலுவலர், கருவூல அலுவலர் ஆகிய 3 பேர் கொண்ட மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இக்குழுவினரிடம் பணம் குறித்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுச்செல்லலாம். தொகுதி முழுவதும் கட்சிக் கொடிக்கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai