சுடச்சுட

    

    பிளஸ்-2 தேர்வில் முறைகேடு: 3 மாணவர்கள் பிடிபட்டனர்

    By கடலூர்  |   Published on : 19th March 2016 06:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 3 மாணவர்கள் வெள்ளிக்கிழமை பிடிபட்டனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை கணிதத் தேர்வு நடைபெற்றது. விருத்தாசலம் தேர்வு மையத்தில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, 2 மாணவர்கள் பதில் குறிப்பிடப்பட்ட துண்டுச்சீட்டு உதவியுடன் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

    அதேபோல் பண்ருட்டியில் தனித் தேர்வர்களுக்கான தேர்வு மையத்தில் ஒருவர் துண்டுச்சீட்டு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதனையடுத்து 3 மாணவர்களும் தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai