சுடச்சுட

  

  நெல்லிக்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

  சட்டப் பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடி மையம் அனைத்து வசதிகளும் பெற்ற நவீன மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம் மாதிரி வாக்குச்சாவடியாக தேர்வு செய்யப்பட்டது.

   அதன்படி பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையமானது மாதிரி வாக்குச்சாவடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது அவர் கூறுகையில், இந்த வாக்குச் சாவடியில் குடிநீர், கழிவறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தள பாதை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள 38 வாக்குச்சாவடி மையங்களும் மாதிரி வாக்குசாவடிகள் போன்றே அனைத்து வசதிகளுடன் அமையும்.

  கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி மட்டும் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்படுகிறது. அந்த வாக்குச்சாவடி மலர்களாலும், பூச்செடிகளாலும் அலங்கரிக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai