சுடச்சுட

  

  கடலூர் பாதிரிக்குப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  அதன்படி கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாதிரிக்குப்பத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல் என்ற தலைப்பில் நடைபெற்ற பேரணிக்கு வட்டாட்சியர் அர.அன்பழகன் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.

  பேரணியில் பங்கேற்றவர்களிடம் கோட்டாட்சியர் பேசுகையில், வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பெயர் இல்லாதபட்சத்தில் உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும். ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். அனைவரும் கண்டிப்பாக வாக்களிப்பதுடன் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றார். பேரணியில் வருவாய் ஆய்வாளர் ப.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai