சுடச்சுட

  

  விருத்தாசலம் அருகே பேருந்து மீது லாரி மோதல்: போக்குவரத்துப் பாதிப்பு

  By கடலூர்  |   Published on : 19th March 2016 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து, விருத்தாசலம் அருகே பாலக்கரையில் பழுதடைந்தது. இதனையடுத்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, பேருந்து பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்டது.

  ரயில் நிலையம் சாலையில் சென்றபோது உளுந்தூர்பேட்டையிலிருந்து பாலக்கரை நோக்கிச் சென்ற லாரி, பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

  இதையடுத்து, பேருந்து சாலையிலேயே நிறுத்தப்பட்டு பேருந்து ஓட்டுநரும், லாரி ஓட்டுநரும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

  இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்து பேருந்தை சரிசெய்து ஓட்டிச் சென்றனர். விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai