சுடச்சுட

    

    காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சி: ஒருவர் கைது

    By நெய்வேலி  |   Published on : 20th March 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    ஊமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக தட்சிணாமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். அரசகுழி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவர் தகராறு செய்வதாக ஊமங்கலம் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி சென்றார்.

    அப்போது அங்கு மாமூல் கேட்டு தகராறு செய்த நபர், சோடா பாட்டிலால் தண்டிணாமூர்த்தியை தாக்கி கொலை செய்ய முயன்றாராம். அவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் பெரியகாப்பாங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராசு மகன் கோதண்டராமன் எனத் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai