சுடச்சுட

  

  கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

  சங்கத் தலைவர் எஸ்.இனிகோஇருதயராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக டி.டேவிட்சுந்தர்ராஜின் ஜெபம், எஸ்.செல்வனின் திருமறை வாசிப்பு நடைபெற்றது.

  கொள்கை பரப்புச் செயலர் டி.ஜெ.கிறிஸ்டோபர் இயக்க விளக்கவுரையாற்றினார். திமுக மாநில மாணவரணி செயலர் இள.புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். தமிழ்நாடு அனைத்து கிறிஸ்தவர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ரமேஷ்பிரபாகரன், துணைத்தலைவர் இ.தியோடர் ஆகியோர் பேசினர். ஜி.கோகுலவாணன் முடிவு ஜெபம் வாசித்தார். முன்னதாக ஜெ.ராஜேஷ் சிசில்குமார் வரவேற்க, பொதுச் செயலர் வே.தளபதி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai