சுடச்சுட

  

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு கடந்த 7ஆம் தேதி தொடங்கி கோடி அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

  மே 1ஆம் தேதி வரை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

  இதுகுறித்து உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தது: இறைவனுக்கு ஒருவர் ஆயிரம் நாமங்கள் மந்திரம் அர்ச்சனை செய்வது சஹஸ்ரநாமம். அதையே ஒரு நாளைக்கு நூறு நபர்கள் ஆயிரம் நாமங்கள் மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது லட்சார்ச்சனை.  ஒரு கோடிமுறை இறைவனின் பெயர்களை சொல்லி வில்வம், பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்வது கோடி அர்ச்சனை எனப்படும்.

  இந்த கோடி அர்ச்சனை செய்து, ஒரு லட்சம் நாமங்கள் மந்திரம் ஹோமம் செய்வது லட்ச ஹோமம் எனப்படும். பல்வேறு மலர்களாலும், வில்வ இலைகளாலும் தெய்வத்தின் பாதங்களில் சேர்ப்பிக்கும் அர்ச்சனை அளவில்லாத பலன்களைத் தரக்கூடியது. இதில் ஸஹஸ்ரநாமாவளிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதிலும் ஸ்ரீநடராஜரை துதிக்கும் நடேச ஸஹஸ்ரநாமம் பற்பல விசேஷங்கள் கொண்டது. இதைக் கேட்பதும் தரிசிப்பதும் மகா புண்ணியங்களைத் தரவல்லது என்றார் அவர்.

   கோயிலில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு தினமும் இரண்டு வேளைகளில் இரண்டு லட்சம் அர்ச்சனை வீதம், 50 தினங்களுக்கு பொதுதீட்சிதர்கள் அர்ச்சனை செய்து வருகின்றனர். இதையொட்டி தினமும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai