சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  உடுமலைப்பேட்டையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர்  என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடலூரில் பழைய ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், மாதர் சங்க மாவட்டச் செயலர் வி.மேரி, தலைவர் பி.தேன்மொழி, கட்டுமான சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.மனோகரன், செயலர் டி.புருஷோத்தமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

  படுகொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் தொடரும் கௌரவக் கொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினர்.

  பொருளர் டி.மணவாளன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai