சுடச்சுட

    

    தீ விபத்தில் குடிசை வீடு சேதம் அடைந்தது.

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் லோ.ராமலிங்கம் (60). விவசாயி. இவரது குடிசை வீட்டில் சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தினர். எனினும், வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கிரைண்டர் உள்ளிட்டப் பொருள்கள் சேதமடைந்தன.  இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டின் மேல் பகுதியில் சென்ற மின்சாரவயர் அறுந்து விழுந்ததில் தீப்பொறி ஏற்பட்டு சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்ததாம். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai