சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை சார்பில், பெண் குழந்தைகளின் நலன், கல்வி, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உண்மையாக்குதல் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது.

  பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகையில், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், இந்திய சமூகத்தில் பெண்கள் மேம்பாட்டின் தேவை குறித்தும் விவரித்தார்.

   தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் புகழேந்தி, சென்னை பல்கலைக்கழகப் பொது வாழ்வியல்துறைப் பேராசிரியர் மதுரைவீரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சிறப்பு விருந்தினரான ஆண்டாள் தாமோதரன் பங்கேற்றுப் பேசினார். கருத்தரங்கு இயக்குநர் மோ.பிரவீன்குமார் விளக்கவுரையாற்றினார். முன்னதாக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் சி.சுப்பிரமணியன் வரவேற்றார். செயலர் ப.முரளிதரன் நன்றி கூறினார்.

   கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. அவற்றில் 108 சிறந்த  கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட ஆய்வுக்கோவை நூலை துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்டார். ஏற்பாடுகளை அரசியல் அறிவியல் துறைத் தலைவர் சி.சுப்பிரமணியன் தலைமையில் முனைவர்கள் மோ.பிரவீன்குமார், ப.முரளிதரன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai