சுடச்சுட

  

  மாவட்ட சதுரங்கப் போட்டி: சிதம்பரம் மாணவர்கள் வெற்றி

  By சிதம்பரம்  |   Published on : 20th March 2016 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் சிதம்பரம் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.

  பரங்கிப்பேட்டையில் அண்மையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் சிதம்பரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.கார்த்திகேயன் முதலிடத்தையும், ஆர்.ரத்தீஷ்குமார், ஆர்.வெங்கடேஷ், எஸ்.ஸ்ரீராம்குமார் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

  பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டியில் வென்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் எல்.புருஷோத்தமனுக்கும் பள்ளிச் செயலர் கே.சேதுசுப்பிரமணியன், முதல்வர் ஜி.ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai