சுடச்சுட

  

  சிதம்பரத்தில் அனைத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் 76ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு காமராஜர் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட நிர்வாகக் குழு தலைவர் கே.கிருபானந்தம் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் டி.எஸ்.எஸ்.பாலக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை மருத்துவ அதிகாரி அமுதா சிவானந்தம் முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் 76 பேர் ரத்ததானம் வழங்கினர்.

  நிகழ்ச்சியில், ரத்தவங்கி அதிகாரி கே.பாண்டியன், சித்த மருத்துவர் எம்.எம்.அர்ச்சுனன், பேராசிரியர்கள் டி.எஸ்.எஸ்.ஞானக்குமார், பொறுப்பாளர் ஆர்.செல்வராஜ், எஸ்.பார்த்தசாரதி, வட்ட பொறுப்பாளர்கள் ஆர்.கண்ணன், டி.மணிவாசகம், எஸ்.முத்துராமலிங்கம், ஆர்.கணேசன், புலவர் சக்தி சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai