Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.

    மாவட்டச் செயலர் கதிர்வாணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மண்டலச் செயலர் சு.திருமாறன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்டப் பொருளர் துரை.மருதமுத்து, மாவட்ட துணைச் செயலர் வீர.திராவிடமணி, மாநில நிர்வாகிகள் திருமார்பன், நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலர் குணத்தொகையன், அன்பழகன், அன்பரசன், காசிநாதன், ராஜாமுகமது, தொகுதிச் செயலர்கள் அய்யாயிரம், ராஜா அலெக்ஸாண்டர், அ.உ.அதியமான், துணைச் செயலர்கள் பாஷா பன்னீர், சத்தியவாடி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும், மேற்கு மாவட்டத்தில்  திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai