சுடச்சுட

    

    விடுதிகளில் அயல்நாட்டினர் தங்கினால் விவரம் தெரிவிக்க எஸ்பி அறிவுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 20th March 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் நிர்வாகிகள் தங்களது இடங்களில் இன்பச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, தொழில், வேலைவாய்ப்பு, உறவினரை பார்க்க வருதல், மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு காரணங்களுக்காக வந்து தங்கும் வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திலுள்ள அயல்நாட்டினர் பிரிவில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

     அதுபோல் வீடுகளில் தங்கும் வெளிநாட்டினர், வெளிநாட்டினரை திருமணம் செய்து இங்கு வந்து தங்கக் கூடியவர்கள், வெளிநாட்டில் பிறந்து இங்கு பெற்றோர் அல்லது உறவினரிடம் தங்கி படிக்கக் கூடிய குழந்தைகள் ஆகியோர் குறித்த விவரங்களையும் சம்பந்தப்பட்ட பிரிவில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

    பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அயல்நாட்டு மாணவர்கள் குறித்த விவரத்தை எஸ் படிவம் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். உறவினர்கள் மற்றும் விடுதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அடைக்கலம் கொடுத்தவர்கள் அயல்நாட்டினர் குறித்த விவரத்தை சி படிவம் மூலமாக 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

     இதுதொடர்பாக தங்கும் விடுதிகள், தொழில் நிறுவனங்கள், தனியார் இல்லங்கள் மற்றும் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி கடலூரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்திலுள்ள

    மேற்கூறிய அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai