Enable Javscript for better performance
வேப்பூர் அருகே பேருந்து மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 4 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேப்பூர் அருகே பேருந்து மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 4 பேர் சாவு

    By கடலூர்  |   Published on : 20th March 2016 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சனிக்கிழமை தனியார் பேருந்து மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக்கோட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (70). இவர் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், தனது உறவினர்களுடன் பங்கேற்று விட்டு சனிக்கிழமை காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

    காரில் கிருஷ்ணன், அவரது மனைவி ஜானகியம்மாள் (70), சேகர் (43), அவரது மனைவி அழகுராணி (40), மகன் வைரமணி (21), சாத்தப்பன் (60), அவரது மனைவி பொன்னழகு (52), தட்சிணி (15) ஆகியோர் பயணம் செய்தனர். காரை வெள்ளாளக்கோட்டையைச் சேர்ந்த சரவணக்குமார் ஓட்டிச் சென்றார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற தனியார் பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில், கார் முற்றிலும் நொறுங்கியது.

    அதில் பயணித்த கிருஷ்ணன், சாத்தப்பன், பொன்னழகு ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அழகுராணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    மேலும் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் சரவணக்குமார், ஜானகியம்மாள் உள்ளிட்டோர் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    தகவலறிந்த வேப்பூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் ஆரோக்கியதாஸை (47) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai