Enable Javscript for better performance
100% வாக்குப் பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கடலூரில் சனிக்கிழமை இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் பங்கேற்றார்.

    கடலூர் மாவட்டத்தில் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில்

    பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சனிக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். மேலும், ஊர்வலத்தில் பங்கேற்று இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப் பதிவை அடைவதற்காக மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவர்களிடையே சொற்பொழிவு, சைக்கிள் ஊர்வலம், மனித சங்கிலி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

     மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம், 18 வயது முடிந்தும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், புதிய வாக்காளர் சேர்ப்புப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி பட்டியலில் இடம் பெறுவதற்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நூறு சதவீத வாக்குப்பதிவு இலக்கை அடைய பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஆட்சியர்.

     விழிப்புணர்வு ஊர்வலமானது நகர அரங்கிலிருந்து செம்மண்டலம், கம்மியம்பேட்டை, புதிய பேருந்து நிலையம், லாரன்ஸ் சாலை, நகராட்சி அலுவலகம், கடற்கரை சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி, வட்டாட்சியர்கள் ப.காந்தி, அர.அன்பழகன், எஸ்.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai