சுடச்சுட

  

  அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி அதிமுகவுக்கு ஆதரவு

  By சிதம்பரம்  |   Published on : 21st March 2016 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

  கடலூர் தெற்கு மாவட்ட அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.எஸ்.செங்கல்ராவ் தலைமை வகித்தார். காட்டுமன்னார்கோயில் ஒன்றியத் தலைவர் எஸ்.சேகர், நகரத் தலைவர் ஆர்.வீராசாமி, மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ்.வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் நா.வெற்றிவேல் வரவேற்றார்.  மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஜெயலலிதா சிறப்பான நல்லாட்சி வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.

   கூட்டத்தில் மாநில விவசாய அணிச் செயலர் ரத்தின.ராமன், தலைமை நிலையச் செயலர் அ.த.ஸ்ரீராகுல், விவசாய அணி துணைத் தலைவர் பி.ராஜேந்திரன், புவனகிரி ஒன்றியத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் டி.செல்வக்குமார் நன்றி கூறினார்.

  தீர்மானம்: வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai