சுடச்சுட

    

    நெய்வேலி வட்டம்-24 அண்ணாசாலையைச் சேர்ந்த டி.ஆர்.தியாகராஜன் (90), நெய்வேலி வட்டம்-5 ஏ-டைப் குவார்டர்ஸைச் சேர்ந்த கோவிந்தசாமி (75) ஆகியோர் காலமானார்கள். இவர்களது இருஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், விருத்தாசலம் அரிமா சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், செயலர் சந்திரசேகர், பொருளர் மனோகரன், இயக்குநர் ராஜா, ஒய்.ராஜா உள்ளிட்டோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai