சுடச்சுட

    

    கடலூரில் ஏஐடியுசி சார்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

    புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் இயக்கத் தலைவர் கன்னையாகுமார், தேசவிரோத குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏஐடியுசி சார்பில் நாடு தழுவிய பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டக்குழு சார்பில் புதுப்பாளையத்தில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

     சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலர் பி.துரை தலைமை வகித்தார். மாநில பொருளர் எம்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பல்கலைக்கழக விவகாரம் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.

     மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன், செயலர் கே.வெங்கடேசன், பொருளர் வி.குளோப், அரசுப் பணியாளர் சங்க மாநில பிரசார செயலர் என்.சுந்தர்ராஜா, அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே.முத்துக்குமரன், பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகிகள் வி.இளங்கோவன், எஸ்.தமிழ்மணி ஆகியோர் பேசினர். ஜீவா நடைபாதை சங்கச் செயலர் ஆர்.முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai